வைகையில் 8 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு... 133 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு..

வைகையில் 8 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு...  133  அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு..
X

தேனி வைகை அணையில் இருந்து விநாடிக்கு எட்டாயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Mullaperiyar Dam News -தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

Mullaperiyar Dam News -தேனி மாவட்டத்தில் நேற்று ஆறாவது நாளாக மழை வெளுத்துக்கட்டியது. இந்த மழையால் சுருளிஅருவி, கும்பக்கரை அருவி, அணைக்கரைப்பட்டி தடுப்பணை, சின்னசுருளி அருவிகளில் நீர் கொட்டுகிறது. இதனால் இங்கெல்லாம் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளை அருகில் செல்லவிடாமல் தடுக்க 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் வனத்துறையினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 511 கனஅடி நீர் மட்டுமே தமிழகப்பகுதிக்கு திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 132.50 அடியை கடந்த நீர் மட்டம் இன்று பிற்பகலுக்கு மேல் 133 அடியை தொட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் முல்லைப்பெரியாறு, சுருளியாறு, கொட்டகுடி ஆறு, வைகை ஆறு, வராகநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணைக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து உள்ளது. நீர் மட்டம் 70 அடியை கடந்ததால் வரும் நீர் முழுக்க ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளிலும் நீர் நிரம்பி வழிகிறது. அத்தனை அணைகளிலும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கோடாங்கிபட்டி, சில்வார்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குன்னுார், அரைப்படித்தேவன்பட்டி உட்பட பல கிராமங்களில் விளைநிலங்கள் முழுமையாக நீருக்குள் மூழ்கின. இங்கு வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தேனி மாவட்டத்தில் தற்போதைய நிலையில் கூடலுாரில் இருந்து தேனி வரை உள்ள பதினான்கு ஆயிரத்து எழுநுாற்று ஏழு ஏக்கர் நெல் வயல்களிலும், மஞ்சளாறு, சோத்துப்பாறை, பெரியகுளம் பெரிய கண்மாய் பாசனப்பகுதிகளிலும் நெல் அறுவடை தொடங்கி உள்ளது. மும்முரமாக அறுவடை நடந்து வரும் நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நெல் வயல்கள் நீரில் மூழ்கி உள்ளன.

நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அரசின் நெல் கொள்முதல் மையங்கள் முழுமையாக செயல்படத்தொடங்கவில்லை. இதனால் தனியார் வியாபரிகள் போட்டி போட்டு நெல் கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ நெல்லுக்கு தோராயமாக பதினெட்டு ரூபாய் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். நெல் காயப்போடுவது, ஈரப்பதம் இழப்பு, மூடை போடும் செலவு, ஏற்றுக்கூலி, இறக்கு கூலி லாரி வாடகை எல்லாம் சேர்த்து, ஒரு கிலோவிற்கு இரண்டு ரூபாய் வரை செலவாகும். ஆக விவசாயிகளிடம் கிலோ பதினெட்டு ரூபாய்க்கு நெல் வாங்கினாலும், அடக்க விலை கிலோ இருபது ரூபாயினை எட்டி விடுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர். மழைக்காலம் என்பதால், அறுவடையான நெல்லை இருப்பு வைத்து விற்பனை செய்வதை விட, உடனே வியாபாரிகளுக்கு விற்பது தான் சிறந்தது என விவசாயிகளும் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!