எகிப்தின் மிக உயரிய விருது பெற்ற இந்திய பிரதமர்

எகிப்தின் மிக உயரிய விருது பெற்ற இந்திய பிரதமர்
X

பைல் படம்

இந்த உலகிலேயே மிக நீண்ட வரலாற்று ஆவண பின்னணி கொண்ட நதியாக இருப்பது நைல் நதி மட்டுமே என்கிறார்கள்.

நைல் நதிக்கு கிட்டத்தட்ட நான்காயிரத்து இருநாறு ஆண்டுகளுக்கு மேலான நதியின் போக்கு குறித்தான ஆவண பதிவுகள் அனைத்தும் இருக்கின்றன. எப்போதெல்லாம் நீர் மட்டம் உயர்ந்து. வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது போன்ற சமாச்சாரங்களை ஆவணங்களாக பராமரித்து வருகின்றனர்.

இந்த உலகின் நீளமான நதிகளில் ஒன்றாகவும் அது விளங்குகிறது. மேற்கு உலக நாடுகளின் ஆய்வாளர்கள் முதன் முதலில் நதிக்கரை நாகரிகங்கள் என பெயர் கொடுத்து ஆய்வு செய்தது எல்லாம் இங்கிருந்தே ஆரம்பமானது. அது நம்மூர் சிந்து சமவெளி நாகரீகம் வரை பின்னர் அவர்களின் ஆய்வு பணி வளர்ந்தது.

இன்று இந்த நதி எகிப்தில் இருக்கிறது. இதன் தலைநகரம் கெய்ரோ. இதன் அதிபராக அப்தெல் பஹட்டா எல் ஸிசி என்பவரும் பிரதமராக மொஸ்டபா மெட்போலி என்பவரும் பதவி வகிக்கிறார்கள். ஓர் ஆழமான இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள்.

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதனை முடித்துக் கொண்டு நேராக கெய்ரோவில் தான் தரையிறங்கினார். அங்கு நம் பிரதமருக்கு பிரமாதமான உற்சாக வரவேற்பினை கொடுத்தது எகிப்து. விழாக் கோலம் பூண்டிருந்தது. எகிப்திய தலைநகர் கெய்ரோ. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அணி திரண்டு வந்து நம் இந்திய தேசத்தின் மூவர்ண கொடியசைத்து வரவேற்பு கொடுத்தனர். பிரதமரும் பிரமிடுகளை பார்வையிட்டு விட்டு ஆயிரம் வருடங்கள் பழைமையான அங்கு உள்ள அல்ஹகீம் மசூதியையும் பார்வையிட்டார். அதன் பின்னர் முதல் உலகப் போரின் பங்கு கொண்டு வீர மரணம் அடைந்த நம் இந்தியர்கள் சுமார் 3727 பேர்களின் நன்கு பராமரிக்கப்படும் கல்லரையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் அவர்.

நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்தின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி நைல் என்பதனை கொடுத்து கௌரவித்தது அந்நாடு. அதன் பின்னர் எகிப்துடனான வர்த்தகம் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு கையெழுத்து இடப்பட்டது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil