வைகை அணைக்கு சுற்றுலா சென்ற தேனி பள்ளி மாணவர்கள்..!

வைகை அணைக்கு சுற்றுலா  சென்ற தேனி பள்ளி மாணவர்கள்..!
X

வைகை அணைக்கு கல்விச் சுற்றுலா சென்ற தேனி அல்லிநகரம் முத்தையா ஆரம்பப்பள்ளி மாணவர்கள்.

தேனி அல்லிநகரம் முத்தையா ஆரம்பப்பள்ளி மாணவர்கள் வைகை அணைக்கு சுற்றுலா சென்றனர்.

பள்ளி மாணவர்களை சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இதற்கு அரசும் நிதி ஒதுக்கீடு செய்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் எந்த பாகுபாடும் இன்றி தனது சொந்த செலவிலும் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்கின்றன.

தற்போது பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்லும் சீசன். தேனி மாவட்டம் வைகை அணைக்கு நேற்று சனிக்கிழமை 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்திருந்தனர். நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்.

தேனி அல்லிநகரம் முத்தையா ஆரம்பப்பள்ளி மாணவர்கள் அனைவரும் தலைமை ஆசிரியர் ஆர்.சீனிவாசகன் தலைமையில் வந்திருந்தனர். 10 ஆசிரியர்கள், ஆசிரியைகளும் உடன் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு அணைக்கு வந்த இவர்கள் மாலை 5 மணி வரை அணையை சுற்றிப்பார்த்தனர். இது குறித்து தலைமை ஆசிரியர் ஆர்.சீனிவாசகன் கூறியதாவது: மாணவர்கள் அணைகள் பற்றியும், நீர் மேலாண்மை பற்றியும், பூங்கா பற்றியும், நீர் மின்நிலையம் பற்றியும், சுரங்கங்கள் பற்றியும், சுற்றுச்சூழல் பற்றியும் பாடங்களில் படிக்கின்றனர்.

இவற்றை நேரில் பார்த்தால் இன்னும் மாணவர்களுக்கு பாடங்கள் எளிதில் புரியும். வைகை அணையில் மாணவர்கள் படிக்கும் அத்தனை அம்சங்களும் உள்ளன. வைகை அணையினை முழுமையாக சுற்றிப்பார்க்க ஒரு நாள் தேவைப்படும். எனவே மாணவர்களுக்கு குடிநீர், உணவு, ஸ்நாக்ஸ், போக்குவரத்து உட்பட அத்தனை வசதிகளையும் பள்ளி நிர்வாகம் சார்பில் செய்து கொடுத்து விட்டோம். மாணவர்களை மிகவும் கண்காணிப்புடன் ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்துச் சென்றோம்.

பின்னர் பூங்காவில் உலாவவிட்டோம். இந்த சுற்றுலா வந்த மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டனர். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!