மதுரை அதிமுகவினருக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை!
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சி வேட்பாளரின் தேர்தல் பணி, கட்சியினர் செயல்பாடு குறித்து அந்தந்த கட்சி தலைமை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதனிடையே, மதுரையில் அதிமுக தேர்தல் பணி சற்று மந்தமாக இருப்பதை அறிந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி நிர்வாகிகளை எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒயிட் ரோஸ் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...!
தொடக்கத்தில் இருந்ததை விட சு.வெங்கடேசனுக்கு பா.சரவணன் கடும் போட்டியை அளித்து வருகிறார். நகர் பகுதியில் கட்சி பணியில் சுணக்கம் காணப்படுவதாக, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தகவல் சென்றுள்ளது. அதையடுத்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோருடன் பழனிசாமி தேர்தல் பணியை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளார். அப்போது, தேர்தலில் போட்டியிட பலருக்கு வாய்ப்பு வழங்கிய போதும் யாரும் முன்வரவில்லை. சரவணன் தேர்தல் செலவை தானே ஏற்றுக்கொண்டு போட்டியிடுவதாக ஆர்வத்துடன் முன் வந்ததால் வேட்பாளராகியுள்ளார். அவரை வெற்றி பெறச்செய்வது கட்சியினரின் கடமை.
ஒரு தவறு செய்தால் ஓடிடி ரிலீஸ் தேதி எது?
ஆனால், அவர் எம்.பி.யாகி விட்டால் தங்களுக்கு இடையூறாக மாறிவிடுவார் என தப்புக்கணக்கு போட்டு தேர்தல் பணியில் சுணக்கம் காட்டுவதாக தகவல் வருகிறது. இது உண்மையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியினர் மந்த செயல்பாடுகளால் சரவணன் தோற்கும் நிலை ஏற்பட்டால், மதுரை மாநகராட்சியில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கி, சரவணனையே மாவட்டச் செயலாளராக அறிவித்து விடுவேன். நான் என்ன சிரமப்பட்டு கட்சியை நடத்துகிறேன். எத்தனை நெருக்கடியை சந்திக்கிறேன். நீங்கள் என்ன விளையாடுகிறீர்களா?
இதைத் தவிர்க்க வேண்டுமானால், தொண்டர்களை அரவணைத்து நிர்வாகிகள் தீவிரமாகவும், விசுவாசமாகவும் களப்பணியாற்ற வேண்டும். தொடர்ந்து தொகுதியை தீவிரமாக கண்காணிப்பேன் என பொதுச் செயலாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu