இப்படி ஒரு ரெசிபி சாப்பிட்டிருக்கீங்களா..?
கேரளாவில் விற்பனையில் சக்கை போடு, போடும் பதப்படுத்தப்பட்ட ரெஸிபிகள்.
இங்கல்ல... நம்ம ஊர்ல இதெல்லாம் கிடைக்காது. ஆனால் கேரளாவில் இதெல்லாம் சாதாரணமாக கிடைக்கும். கேரளாவில் மலைப்பிரதேசங்கள் அனைத்திலும் இந்த உணவுகள் தாராளமாக கிடைக்கும். அதாவது மாங்காய், (புளிப்புச்சுவை மிகுந்தது) வெள்ளைப்பூடு, சிவப்பு மிளகாய், கார பச்சை மிளகாய், கானமிளகாய், பெரிய நெல்லிக்காய், சிறிய நெல்லிக்காய், கேரட், இன்னும் சில காய்கறிகளை பக்குவமாக அதே சமயம் பார்த்தவுடன் சாப்பிடத் துாண்டும் வகையில் கவர்ச்சியாக அறுத்து, உப்பும், வினிகரும் கலந்த தண்ணீர் பாட்டிலில் ஊற்றி ஊறவைத்து விடுகின்றனர். அல்லது கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பேக்கில் ஊற்றி ஊற வைக்கின்றனர்.
இதனை கடைகளில் அடுக்கி வைத்து விற்கின்றனர். இதனை பார்ப்பவர்களுக்கு, பார்த்த உடனே நாவில் எச்சில் சுரக்கத்தொடங்கும். நிச்சயம் வாங்கத்துாண்டும். அந்த அளவு பேக்கிங்கும் கவர்ச்சியாக இருக்கும். ஒரு பீஸ் எடுத்து சாப்பிட்டால், அது தரும் சுறுசுறு நிறைந்த சுவை தலை உச்சி முதல் பாதம் வரை சுவை நம்புகளை துாண்டி, உடலையே சிலிர்க்க வைக்கும்.
அதுவும் தற்போது கேரளாவில் 12 முதல் 16 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ந்த பருவநிலை காணப்படுகிறது. கடும் ஈரப்பதம் நிறைந்த குளி்ச்சியான காற்று வீசுகிறது. இந்த பருவநிலையில், உப்பு, வினிகர் தண்ணீரில் ஊற வைத்த இந்த காரம் நிறைந்த காய்கள், (கேரட், வெள்ளரி தவிர) சாப்பிடுவதே மிகுந்த ஒரு சிலிர்ப்பான அனுபவமாக உள்ளது. ஒரே ஒரு கானமிளகாய் தரும் காரத்தில் நான்கு நாள் உணவை சாப்பிட்டு விடலாம். இதனால் மக்கள் வீடுகளுக்கும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu