தேனி மாவட்டத்தில் கிலோ ரூ.6க்கு மண்புழு உரம்: குவியும் கேரள வியாபாரிகள்

தேனி மாவட்டத்தில் கிலோ ரூ.6க்கு மண்புழு உரம்: குவியும் கேரள வியாபாரிகள்
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் மண்புழு உரம் வாங்க கேரளாவில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் மண்புழு உரம் கிலோ 6 ரூபாய்க்கு கிடைப்பதால், கேரள வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தின் பல கிராமங்களில் மண்புழு உரம் தயாரிப்பு கூடங்கள் உள்ளன. இங்கு தரமான மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு ஒரு கிலோ 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எவ்வளவு செயற்கை உரங்களை கொட்டினாலும், மண்புழு உரம் அளவிற்கு நிலத்தின் உயிரோட்டத்தை பாதுகாக்க முடியாது.

தவிர இந்த மண்புழு உரங்களை பயன்படுத்தும் நிலங்களின் வளம் மிகவும் அதிகரிக்கிறது. இதனால் விளைச்சலும், தரமும் அதிகரிக்கிறது. மிகவும் குறைந்த செலவில் கிடைக்கும் இயற்கை உரம் அதிக பலன்களை தருவதால் கேரளாவில் ஏலத்தோட்டங்கள், மிளகு தோட்டங்கள், தேயிலை தோட்டங்களுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எனவே கேரளாவில் இந்த உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கேரள வியாபாரிகள் தேனியில் முகாமிட்டு மண்புழு உரக்கூடங்களுக்கு சென்று உரங்களை வாங்கி கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!