தமிழகத்தில் தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன ? அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன ? அதிர்ச்சி தகவல்
X

பைல் படம்

வரலாறு காணாத தக்காளி விலை உயர்வுக்கான முக்கிய காரணிகள் குறித்து தோட்டக்கலைத் துறையினர் விளக்கமளித்துள்ளனர்

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பெய்யும் பலத்த மழையால் தக்காளி செடிகள் அழுகிப்போனதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி செடிகளில் 85 சதவீதம் செடிகள் அழுகி விட்டன. பழமும் அழுகிவிட்டன. மழை நின்றதும் செடியில் மீண்டும், அடுத்த தக்காளி காய்த்து விடும். தற்போது செடிகள் அழுகி விட்டன. தக்காளி காய்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. தமிழக முழுவதும் தக்காளி சாகுபடிக்கு இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக உற்பத்தி குறைந்து போனதால் உருவாகியுள்ள பற்றாக்குறைக்கும் மக்களின் தேவைக்கும் மிகப்பெரிய இடைவெளியை சமாளிக்க வெளி மாநிலங்களின் தக்காளி விளைச்சலும் கைகொடுக்காத சூழல் ஏற்பட்டுள்ளதால், தக்காளி விலை கிலோ 130 ரூபாயைத் தாண்டி, மக்களையும் அரசாங்கத்தையும் அதிர்ச்சியில் திகைக்க வைத்துள்ளது.

அடுத்தாக மழை நின்றாலும், புதிதாக சாகுபடி செய்த பின்னரே கிடைக்கும் விளைச்சலால் மட்டுமே விலை குறையும் வாய்ப்பு நிலை உருவாகியுள்ளது. இதனால் தக்காளி விலை குறைய சிலகாலம் பிடிக்கலாம். தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இதே நிலை தான் நீடிக்கிறது. தக்காளி விலை குறையாததற்கு இதுவே முக்கிய காரணம் என்று அவர்கள் கூறினர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்