தேனி புதுபஸ்ஸ்டாண்டில் நெரிசல் விரிவாக்க பணி செய்ய வலியுறுத்தல்
பைல் படம்
தேனியில் 2013ம் ஆண்டு திறக்கப்பட்ட புதிய பஸ்ஸ்டாண்ட் தற்போதே நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
தேனியில் கலெக்டர் அலுவலக வளாகம் செய்யும் வழியில் பைபாஸ் ரோட்டருகே 7.35 ஏக்கர் பரப்பில் புதிய பஸ்ஸ்டாண்ட் 22 கோடி செலவில் கட்டப்பட்டு 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. அப்போது எதி்ர் காலத்தில் 25 ஆண்டுகளுக்கு இந்த பஸ்ஸ்டாண்ட் போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் திறக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் தற்போதே பஸ்ஸ்டாண்ட் நெரிசலில் தவிக்கிறது. இந்த பஸ்ஸ்டாண்டில் இருந்து தான் மதுரை, திண்டுக்கல், போடி, கம்பம் வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் பல ஆயிரம் பஸ்கள் வந்து செல்வதால் நெரிசல் அதிகம் உள்ளது.
இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 7.35 ஏக்கர் பரப்பில் 5 ஏக்கரில் மட்டுமே பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள இடம் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 ஏக்கரிலும் பஸ்கள் நிறுத்த சிறிதளவு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு மீதம் இடங்களில் கடைகள், கழிப்பறைகள் என வருவாய் தரும் வணிக இடங்கள் கட்டப்பட்டுள்ளன.
எனவே பஸ்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடம் போதவில்லை. இன்னும் கூடுதல் இடம் தேவைப்படுகிறது. பஸ்ஸ்டாண்டினை ஒட்டிய பகுதிகளில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி பஸ்ஸ்டாண்டினை விரிவாக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பஸ்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu