தேனி போக்குவரத்து போலீசார் சார்ப்பில் போதை விழிப்புணர்வு

தேனி போக்குவரத்து போலீசார் சார்ப்பில் போதை விழிப்புணர்வு
X

தேனி கொண்டுராஜா உயர்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு டி.எஸ்.பி.,பால்சுதன் பரிசு வழங்கினார். அருகில் போக்குவரத்துஇன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி.

தேனி போக்குவரத்து போலீசார் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேனி கொண்டுராஜா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி., பால்சுதன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். போதை பழக்கத்தில் சிக்காமல் வாழ்வது, சிக்கினால் மீண்டு வருவது, போக்சோ சட்டங்கள், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட தலைப்புகளில் டி.எஸ்.பி.,யும், இன்ஸ்பெக்டரும் பேசி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள் பங்கேற்ற கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.எஸ்.பி., பால்சுதன் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது