பெரியகுளம் லட்சுமிபுரத்தில் குளத்தில் இறங்கிய முதியவர் பலி

பெரியகுளம் லட்சுமிபுரத்தில் குளத்தில் இறங்கிய முதியவர் பலி
X
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் குளத்தில் இறங்கிய முதியவர் நீரில் மூழ்கி பலியானார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி, 65. இவர், நேற்று மாலை லட்சுமிபுரம் கரிசல் குளத்தில் கை கால் கழுவுவதற்காக இறங்கியுள்ளார்.

அப்போது திடீரென வழுக்கி, குளத்திற்குள் விழுந்து நீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெரியகுளம் தீயணைப்பு படையினர் வந்து, அவரது உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து, பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!