இடுக்கி மாவட்டத்தில் கடும் வறட்சி: காய்ந்து கருகும் ஏலத்தோட்ட செடிகள்

இடுக்கி மாவட்டத்தில் கடும் வறட்சி: காய்ந்து கருகும் ஏலத்தோட்ட செடிகள்
X

இடுக்கி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் காய்ந்து வரும் ஏலச்செடிகள்.

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் ஏலத்தோட்ட செடிகள் காய்ந்து வருகின்றன.

தேனி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது கேரளாவின் இடுக்கி மாவட்டம். இங்கு மட்டும் சுமார் ஒண்ணரை லட்சம் ஏக்கர் பரப்பில் ஏலக்காய், தேயிலை, காபி, மிளகு விவசாயம் நடைபெற்று வருகின்றன. எப்போதும் வளமாக பச்சை பசேல் என்று காணப்படும் இந்த இடுக்கி மாவட்டம், தற்போது காய்ந்து வருகிறது. கடந்த டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு இடுக்கி மாவட்டத்தி்ல் எங்குமே மழை பதிவாகவில்லை. மாறாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் இங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஏலச்செடிகள் காய்ந்து வருகின்றன.

ஏலக்காய்களும் உதிரத்தொடங்கி உள்ளது. தேயிலை, காபி செடிகளுமே வறட்சியில் சிக்கி உள்ளன. பெரும்பாலான வனநிலங்களில் விளைந்துள்ள புற்கள் காய்ந்து சாம்பல் கலரில் காணப்படுகின்றன. மழை பெய்தால் மட்டுமே இங்குள்ள விவசாயத்தை காப்பாற்ற முடியும். கடந்த ஓரிரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.ஆனால் பெரிய மழை பெய்யவில்லை. வரும் ஏப்ரல் 14ம் தேதிக்குள் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என ஏலத்தோட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story