தேனியில் நிழற்பந்தல், தண்ணீர் வழங்க இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்

தேனியில் நிழற்பந்தல், தண்ணீர் வழங்க   இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்

தேனி நகராட்சி அலுவலகத்தில் இந்து எழுச்சி முன்னணி நகர, ஒன்றிய நிர்வாகிகள்.

தேனியில் வெயிலின் தாக்கத்தை தடுக்க முக்கிய இடங்களில் நிழற்பந்தல், தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி சார்பில் வலியுறுத்தல் .

தேனிநகர இந்து எழுச்சி முன்னணி முடிவு தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பாக நகர தலைவர் செல்வபாண்டியன் தலைமையில், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர துணைத்தலைவர் நாகராஜ், தேனி நகர செயலாளர்கள் புயல்ஐயப்பன், தினேஷ்குமார், நகர துணை செயலாளர்கள் பிரேம், ரகு, வளம்ஆட்டோ சிவா, விஷ்ணு, மணி மற்றும் உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் இளம்பரிதி தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். நகராட்சி மேலாளர் முனிராஜிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் தேனி நகரில் பல இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது பங்குனி சித்திரை மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் முதியோர்கள், கர்ப்பிணிப்பெண்கள், சிறுவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், பொதுமக்களாகிய பயணிகள் நிழற்குடை இல்லாமல் மிகவும் வாடி வதங்கி துயரத்திற்கு ஆளாகிறார்கள். சிலர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கியும் விழுந்து விடுகிறார்கள். பயன்பட வேண்டிய காலத்தில் நிழற்குடையின் பயன்பாடு இல்லை என்னும் போது பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தின் மீது மிகுந்த வெறுப்படைகிறார்கள்.

எனவே காலம் தாழ்த்தாமல் ஒரு வார காலத்திற்குள் நிழற்குடைகளை மீண்டும் அமைத்து பொதுமக்களின் நலனை காத்திட வேண்டும். இல்லையென்றால் இந்து எழுச்சி முன்னணி இயக்கத்தின் சார்பில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்கூரைகள் அமைக்கப்படும். வெயில் காலம் என்பதால் நகருக்குள் ஆங்காங்கே நகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்கள் தாகம் தீர்த்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story