கோட்டூர், சின்னமனுாரில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் கடும் அவதி

கோட்டூர், சின்னமனுாரில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் கடும் அவதி
X
கோட்டூர், சின்னமனுார் உட்பட பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு. பொதுமக்கள் புகார்

முல்லைபெரியாற்றின் கரையில் அமைந்துள்ள கோட்டூர், சின்னமனுார் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் 10 நாட்களாகவே குடிநீர் சப்ளை சரியில்லை எனவும் பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் நீர் ஆதாரங்கள் எல்லாமே நிரம்பி வழிகின்றன. இருப்பினும் உள்ளாட்சிகளின் முறையற்ற செயல்முறைகளால் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக சின்னமனுாரில் பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

அதேபோல் கோட்டூரில் பல தெருக்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் இல்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். உள்ளாட்சிகள் குடிநீர் சப்ளையை சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு புகார் அனுப்பி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!