திராவிட அரசியலுக்கு கடும் நெருக்கடி? திசை மாறுகிறதா தமிழக அரசியல்

திராவிட அரசியலுக்கு கடும் நெருக்கடி?  திசை மாறுகிறதா தமிழக அரசியல்
X

பைல் படம்

Dravidian People -தமிழகத்தில் திராவிட அரசியல் இதுவரை இல்லாத அளவு நெருக்கடியினை சந்தித்து வருகிறது

Dravidian People -காமராஜரை வீழ்த்தி 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல் தற்போது மிகுந்த சவால்களை சந்தித்து வருகிறது. பாரதீயஜனதா உருவாக்கி வைத்துள்ள கடுமையான தொழில்நுட்பக்குழு அதாவது ஐ.டி., விங்க் திராவிடத்தின் அத்தனை அம்சங்களையும் கிழிகிழியென கிழித்து வருகிறது. அண்மையில் தி.மு.க., எம்.பி., ராஜா இந்துக்கள் பற்றிய பேசிய பேச்சை 8 கோடி தமிழர்களிடமும் கொண்டு போய் சேர்த்து பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

பா.ஜ., ஐ.டி., விங்க். அதேபோல் அமைச்சர் மூர்த்தி நடத்திய திருமணத்தையும், அதில் நடந்த அத்தனை தடபுடல்களையும் வீடியோவாகவே மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்துள்ளது. இதனால் மூர்த்தி பதவி நிலைக்குமா? என்கிற கேள்வியே எழும் அளவுக்கு தமிழக அரசியல் நிலை மாறி உள்ளது.

தவிர ஒவ்வொரு நகர்வினையும் அரசியலாக்குவதில் பா.ஜ.க கையாண்டு வரும் நுட்பம் திராவிட அரசியல் சந்திக்காத மாபெரும் சவாலாகவே உள்ளது. பா.ஜ.க, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் அதே வேகத்தை தி.மு.க. அரசு திட்டங்களின் குளறுபடிகளை கொண்டு போய் சேர்ப்பதிலும் காட்டி வருகிறது.

செருப்பு அரசியலாகட்டும், வெறுப்பு அரசியலாகட்டும், ஜாதி அரசியலாகட்டும், வார்த்தை ஜாலமாகட்டும் 'நீ எடுக்கும் அதே ஆயுதத்தை நானும் எடுப்பேன்' என பா.ஜ.க, நடத்தும் அதிரடிகளால் தமிழக தேர்தல் களம் கலகலக்கிறது. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விடும் வீடியோ வெளிவந்த ஓரிரு நிமிடத்தில் ஸ்டாலின் சாப்பிடாமல் சாப்பாட்டுடன் தட்டில் கைகழுவும் வீடியோவை பா.ஜ.க, வெளியிட்டு அந்த செய்தியையே அடித்து நொறுக்கி விட்டது.

தி.மு.க., என்ன தான் வலுவான சக்தி வாய்ந்த கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சி, அசுர பணபலம் ஆள் பலம் கொண்ட கட்சியாக இருந்தாலும், பா.ஜ.க வை எதிர்கொள்ள முடியாமல் ஒவ்வொரு மோதலிலும் பின்வாங்கி வருகிறது. இதனை மக்களும் கவனிக்கின்றனர். மதுவிலக்கு பிரசாரம் செய்ய தி.மு.க., நியமித்திருந்த சில பேச்சாளர்கள், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஆட்டிப்படைத்தனர். தற்போது அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களை கூட கண்டறிய முடியவில்லை. அந்த அளவு பா.ஜ.க, ஐ.டி., விங்க் ஏறி அடிக்கிறது.

மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்த மதுரை சகோதரிகளை திண்டுக்கல்லிலும், தேனியிலும் பா.ஜ.க,வினர் விரட்டி விரட்டி அடித்தனர். மதுரை பா.ஜ.க, அலுவலகத்திற்கு மதுரை சகோதரிகள் வரலாம் என்ற தகவல் கிடைத்ததும் அவர்களை எதிர்கொள்ள பா.ஜ.க, ஏற்பாடு செய்திருந்த தகவல் சகோதரிகளை நடுங்க வைத்து விட்டது. இதனை அறிந்த மதுரை சகோதரிகளே பின்வாங்கி விட்டனர். அந்த அளவு தி.மு.க., ஆதரவாளர்களையும், இதுவரை தி.மு.க.,விற்காக பேசியவர்களையும் வாட்டி வதக்கி வருகின்றனர் பா.ஜ.க, ஐ.டி., குழுவினர்.

பொதுவாக திராவிட அரசியல் வரலாற்றில் இந்துத்துவா புகுந்து இப்படி ஒரு எதிர்ப்பினை காட்டும் என்பதை கனவில் கூட நினைக்க முடியவில்லை. பெரியார் சிலைக்கு கீழே உள்ள வாசங்களை அகற்றுவது தொடர்பாக தி.மு.க., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்விகளுக்கு தி.மு.க. என்ன பதில் அளிக்கப்போகிறது என்பதில் தான் திராவிட அரசியலின் எதிர்காலமே அடங்கி உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்சப்புல கால் ரெகார்ட் பண்ணிக்கலாமா , வாங்க எப்புடின்னு பாக்கலாம்