சின்னமனுாரில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: மக்கள் அவதி

சின்னமனுாரில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: மக்கள் அவதி
X

சின்னமனுாரில் வீடுகளுக்கு சப்ளையாகும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.

சின்னமனுார் நகராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து சப்ளையாவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

சின்னமனுார் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடையும், குடிநீர் பைப் லைன்களும் ஒரே இடத்தில் செல்கின்றனர். ஏதோ ஒரு இடத்தில் கழிவுநீர் குடிநீரில் கலக்கிறது. சின்னமனுார் கருங்கட்டான்குளம், தெற்கு முஸ்லீம் தெருக்கள் உட்பட பல தெருக்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் வருகிறது. துர்நாற்றமும் உள்ளது.

இந்த நீரை மக்கள் குடிக்கவும் முடியாமல், பயன்படுத்தவும் முடியாமல் பரிதவிக்கின்றனர். இந்த நீர் பிடித்து வைத்த பாத்திரங்களை கழுவ கூட மக்களிடம் வேறு தண்ணீர் இல்லை. அந்த அளவு நெருக்கடியில் உள்ளனர். சின்னமனுார் நகராட்சி நிர்வாகம் இந்த பிரச்னையை மிகவும் துரிதமாக சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!