குச்சனுாரில் வாய்க்கால் உடைப்பு: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

குச்சனுாரில் வாய்க்கால் உடைப்பு: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
X

குச்சனுார் கால்வாய் உடைந்து நெல் வயல்களுக்குள் பாயும் மழை நீர்.

தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் குச்சனுாரில் வாய்க்கால் உடைந்து நெல் வயல்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் குச்சனுார் வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல நுாறு ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்தன.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த பலத்த மழையில் முல்லை பெரியாற்றில் இருந்து குச்சனுார் வழியாக செல்லும் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்தது. இதில் வெள்ளநீர் முழுக்க வயல்களுக்குள் புகுந்து அந்த பகுதி முழுக்க வெள்ளக்காடாக மாறியது.

நெல் நாற்றுகளை நடவு செய்து 15 நாட்கள் மட்டுமே ஆன வயல்களில் வெள்ளம் புகுந்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!