தேனி போலீஸ் எஸ்.ஐ. தாய், தந்தை மீது வரதட்சணை வழக்கு

தேனி போலீஸ் எஸ்.ஐ. தாய், தந்தை   மீது வரதட்சணை வழக்கு
X
தேனி போலீஸ் எஸ்.ஐ. அவரது தாய் தந்தை மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் தேனி சைபர் குற்றப்பிரிவில் எஸ்.ஐ., ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கும் நாகலாபுரத்தை சேர்ந்த ரமாதேவி என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் ரமாதேவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக எஸ்.ஐ., முருகன், அவரது தந்தை வேல்சாமி, தாய் பொன்னுத்தாய், சகோதரர்கள் வீராச்சாமி, ரவி உட்பட ஏழு பேர் மீது தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் எஸ்.ஐ., முருகனின் தாய் பொன்னுத்தாய் கொடுத்த புகாரின் பேரில், தேனி போலீசார் ரமாதேவி மீதும், அவரது சகோதரி செல்வி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!