தேனி மார்க்கெட்டில் இருந்து கேரளா செல்லும் காய்கறிகள் இருமடங்கு அதிகரிப்பு
தேனி மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் காய்கறிகளின் அளவு இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.
கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளது. அசைவ உணவுகளை குறைத்து விட்டனர். தேனி மாவட்டத்திலும் இதே நிலை தான் காணப்படுகிறது. ஆனால் மழை பெய்து வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது.
விலையை பற்றி கவலைப்படாமல் கேரளாவிற்கு காய்கறிகளை அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக தேனி மார்க்கெட், தேவாரம் மார்க்கெட், கம்பம் மார்க்கெட்டில் இருந்து மட்டும் கேரளாவிற்கு தினமும் 200 டன்னுக்கும் அதிகமான காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. உள்ளூர் தேவையும் அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
தேனி தினசரி சில்லறை மார்க்கெட்டில் இன்று கத்தரிக்காய் ஒரு கிலோ 120 ரூபாய், தக்காளி ஒரு கிலோ 110 ரூபாய், வெண்டைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய் என விற்கப்பட்டது. அவரைக்காய் 130 ரூபாய், முருங்கைக்காய் 110 ரூபாய், சின்னவெங்காயம் 70 ரூபாய், பெல்லாரி 70 ரூபாய், வெள்ளைப்பூண்டு 200 ரூபாய், முருங்கை பீன்ஸ் 130 ரூபாய், நாட்டு பீன்ஸ் 110 ரூபாய், பட்டர் பீன்ஸ் 180 ரூபாய், கொய்யாப்பழம் கிலோ 60 ரூபாய், சப்போட்டா பழம் 200 ரூபாய், மாதுளை பழம் 200 ரூபாய் என விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu