வெற்றி எத்தனை? எப்படி? பா.ஜ.க.,வின் தேர்தல் வியூகம்..!
பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள் (கோப்பு படம்)
பாஜக தமிழகத்தில் இரட்டை விளக்கங்களில் வெற்றிபெறும் என்று முழு நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை செய்து வருகிறது. கோவை - அண்ணாமலை, தென்சென்னை - தமிழிசை, கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், வேலூர் - ஏ.சி. சண்முகம் ஆகியோர் வெற்றி 100 சதவீதம் உறுதி என்ற நம்பிக்கை பா.ஜ.க.,வுக்கு உள்ளது.
மத்திய உளவுத்துறை எடுத்துள்ள சர்வேயில் பா.ஜ.க., கூட்டணி தர்மபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, தேனி, திருநெல்வேலி, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, வேலுார், ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 16 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம் என கூறியுள்ளது.
இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்கியதும் கள நிலவரங்கள் மாறிவிட்டன. கோவை, திருப்பூர் தொகுதிகளில் GST, பணமதிப்பிழப்பு மற்றும் தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி தலைவர்கள் பற்றிய வாட்ஸ் அப் பதிவுகள் அண்ணாமலைக்கு எதிராக திரும்பியுள்ளன. இதனால் அண்ணாமலை தனது திருநெல்வேலி பயணத்தையே ரத்து செய்துள்ளார்.
கன்னியாகுமரியில் மீனவர் வாக்குகளை அஇஅதிமுக பிரிக்காது என்ற நிலையில் பொன்னார் பின் தங்குகிறார். ஆளுநர் தமிழிசை வெற்றிக் கோட்டை நெருங்க கடுமையாகப் போராடுகிறார். திருநெல்வேலியில் பாஜக எம்எல்ஏ, ஆலங்குளம் பாஜக ஆதரவு எம்எல்ஏ, அம்பாசமுத்திரம் வேட்பாளரின் ஆதரவு எம்எல்ஏ அதாவது 6 இல் 3 MLA பாஜக ஆதரவு, ராதாபுரம் மணல் அதிபர் ஆதரவு, பாளையங்கோட்டையில் ஜான்பாண்டியன் கூட்டணி, நாங்குநேரி வேட்பாளரின் சொந்த ஊர், சரத்குமார் ஆதரவு என்ற கணக்கில் பாஜகவின் ஒரே நம்பிக்கையாக திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் மட்டுமே இருக்கின்றார்.
ஏப்ரல் முதல்வாரத்தின் நிலவரப்படி, 1. தேனி - டிடிவி தினகரன், 2. ராமநாதபுரம் - ஓ.பன்னீர்செல்வம், 3. தென்காசி - ஜான்பாண்டியன், 4. சிவகங்கை - தேவநாதன், இந்த 4 தொகுதியில் பிரசார யுக்திகளை மாற்றினால், வெற்றியை நெருங்கலாம் என்று பாஜக தேசியத் தலைமைக்குத் தகவல் போயுள்ளது.
தொகுதி நிலவரத்திற்கு ஏற்ப, மோடி, அமித்ஷா, யோகி, நிர்மலா, மத்திய அமைச்சர்கள் வருகை பற்றி திட்டமிடுகிறார்கள். தேனி தொகுதியில் டிடிவி தினகரன் அவரது சித்தியான வி.கே. சசிகலா பெயர், படம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை சசிகலா அரசியல் பேச மாட்டார்.
ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் பிரசாரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களையே அதிகம் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளனர். கூட்டணிக் கட்சிகள், அமைப்புகளை OP ஜெயபிரதீப் பார்த்துக் கொள்வார். தென்காசி தொகுதியில் ஜான்பாண்டியன் அவரது தமமுக கட்சியின் கொடி, துண்டுகளை பயன்படுத்தக் கூடாது. அவரது கட்சியினரும் பாஜக துண்டு மட்டுமே அணிய வேண்டும்.
அண்மையில் பாஜகவில் சேர்ந்த கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர்களை பாஜக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது. அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகள் அந்தந்த தொகுதியில் மட்டுமே பணி செய்ய வேண்டும். தஞ்சாவூர், ராமதாதபுரம் தொகுதியில் இருக்கும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சொந்த தொகுதிக்கு திரும்ப வேண்டும்.
RSS அமைப்பின் திண்ணைப் பிரசாரத்தை 9 தொகுதிகளில் மட்டும் தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்களோடு இணைந்து அமைக்கும் பணப்பட்டுவாடா தடுப்புக் குழு உறுப்பினர்கள் திமுக, அதிமுக கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தடுக்க வேண்டும். பணப்புகார் வருமிடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, பறக்கும் படை சோதனைகள் அதிகம் நடக்கும். இவ்வாறு பல்வேறு அதிரடி திட்டங்கள் பா.ஜ.க.,விடம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu