இழப்பதற்கு ஒன்றுமில்லை ; மக்கள் நம்முடன் உள்ளனர்..!
அண்ணாமலையுடன் டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்.,
தேனி பா.ஜ.க., மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் கவலையில்லை. அதைவிடுத்து இப்போதே அதுசரியில்லை இது சரியில்லை, களம் எதிர்தரப்பிற்கு சாதகமாக மாறுகின்றது என்பதெல்லாம் அபத்தம். இந்த பேச்சுகள் களத்தில் நிற்போரின் மனவலிமையினை குலைக்கும். பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெல்லும் நிலையில் உள்ளது என்பது ஒரு சில கணிப்புகள் கொடுக்கும் செய்தி.
அது நடக்குமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் இம்மாதிரி செய்திகள் தான் தொண்டனை உற்சாகமாக வைத்திருக்கும். தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டியது தான். தேசியவாதிகள் கடமையே தவிர "தடா பெரியசாமி' சென்று விட்டார் அய்யகோ என்பதெல்லாம் அபத்தம்.
காங்கிரஸில் இருந்து விஜயதாரணி வந்தார். இன்னும் அதிமுகவில் இருந்து யார் யாரோ வந்தார்கள், வருகின்றார்கள். அப்படியான கட்சியில் தடா பெரியசாமி ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. தேர்தல் நேரம் பறவைகள் குளத்தை விட்டு வேறு குளத்திற்கு மாறும். மரங்கள் எப்போதும் மாறாது. அதையெல்லாம் காட்டி தொண்டர்களின் மனோபலத்தை குலைக்க நினைப்பது வன்மம் கொண்டதே தவிர நன்மை கொடுக்காது.
பாஜக தொண்டர்கள் அவரவர் கடமையினை செய்யட்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யட்டும். இங்கே மாற்றம் ஒரே நாளில் வந்துவிடாது. 1982ல் பாஜக பெற்ற எம்பிக்கள் நாடெங்கிலும் இரண்டு மட்டுமே. அப்போதே முடங்கியிருந்தால் இன்றைய அசுரபலம் சாத்தியமில்லை.
வெற்றி பெற்றால் மகிழ்ச்சி, அதை தவறவிட்டால் மீண்டும் முயற்சி என்பதற்கு அனுபவமாக பெற்று கொண்டு கடமையினை செய்யவேண்டும். தொடர்ந்து கொட்டும் உழைப்பு ஒருநாள் பலன் தரும். பாஜக இப்போது மக்களின் நம்பிக்கையினை பெறுகின்றது, மோடி, அண்ணாமலை என மிகபெரிய பிம்பங்கள் மக்கள் மனதில் நம்பிக்கையினை கொடுக்கின்றன. மக்கள் பாஜகவினை ஏற்றுக்கொண்டு வருகின்றனர். எப்போதுமே மாற்றம் நடக்கும் என்பது வெளியே தெரியாது. ஆனால் சட்டென நடக்கும்.
காமராஜருக்கு எதிரான அலை உள்ளூர வீசியபோது எல்லோரும் அவர்தான் வெல்வார் என சொல்லிக் கொண்டிருந்தார்கள். 1977 தேர்தலில் எம்ஜிஆர் வெல்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை, 50 தொகுதி வெல்லலாம் என்பதே கணிப்பாய் இருந்தது. ஆனால் அடுத்த 11 வருடம் அவரை அசைக்கமுடியவில்லை.
மூப்பனார் எழுச்சி, விஜயகாந்தின் வரவு எல்லாம் அப்படியானது தான். இங்கு கணிப்புகள் நொடியில் பொய்க்கும். பெரும் பெரு ஆரூடமெல்லாம் நொடியில் தகரும். எந்த கொம்பனும் மக்களின் நாடியினை அறிய முடியாது, அப்படி அறிந்தவர்கள் மறைக்க பார்ப்பார்கள். ஊடகம், மேடைகள் இன்னும் பலர் அள்ளி எறியும் பணம், காட்டும் அதிகாரம் அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கும், ஆனால் நிலைமை வேறாக முடியும். இந்திரா மிசாவுக்கு பின் தோற்றது அப்படித்தான்.
இங்கே பாஜக இப்போது தான் முளை விடுகின்றது. இரண்டாம் பெரிய கட்சி எனும் இடம் நோக்கி செல்ல நகர்கின்றது, அதற்கேற்ற காலமும் கனிந்திருகின்றது. தேர்தல் முடிவு எதுவென்றாலும் பின்னால் பார்க்கலாம், நிச்சயம் இழக்க ஏதுமில்லை பெறுவதெல்லாம் லாபமே.
அந்நிலையில் தொண்டர்களின் மனோபலம் முக்கியம், உற்சாகம் முக்கியம், அது குலையாமல் காக்கும் பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. அந்நிலையில் களம் அப்படி மாறுகின்றது, இபப்டிமாறுகின்றது என ஏதோ கடித்தது போல, மூல வியாதி கண்டவனை போல அலறுவது அபத்தம்.
களத்தில் இருக்கும் தொண்டன் உற்சாகமாக இருக்கட்டும், அண்ணாமலை பின்னால் திரண்ட கூட்ட அவநம்பிக்கை கொள்ளமல இருக்கட்டும். எதிர்கட்சி திராவிடம் செய்ய வேண்டியதை பேசவேண்டியதையெல்லாம் தேசாபிமானிகள் பேசுவது தவறு. எது என்றாலும் தேர்தலுக்கு பின்னர் பார்க்கலாம், வாழைமரம் ஒரே வருடத்தில் பலன் தந்து ஓயும், தென்னைமரமோ ஆலமரமோ வைத்தால் காத்து தான் இருக்கவேண்டும். அவரவர் கடமையினை அவரவர் உற்சாகமாக செய்யட்டும். ஐபில் அரங்கில் கைதட்டுவோரெல்லாம் வெற்றி தோல்வி குறித்து கைதட்டுவதில்லை.
யாரும் அரங்கில் இருந்து மிரட்டுவதில்லை. களம் மாறுகின்றது பந்து எகிறுகின்றது என அலறுவதில்லை. அரங்கில் நிற்பவன் அதை பார்த்துகொள்வான், ஆட்டம் முடிந்து அலசுவது தான் சிறப்பே தவிர ஆடிகொண்டிருப்பவனிடம் அவநம்பிக்கை வரும்படி குழப்புதல் சரியல்ல. தடா பெரியசாமி ஒன்றும் அமித்ஷா அல்ல. அவர் ஆ.எஸ்.எஸ் வளர்ப்போ ஆதிகாலத்தில் இருந்து வந்த தேசாபிமானியோ அல்ல.
இதையெல்லாம் புறந்தள்ளி, குழப்பங்களை தூரத் தள்ளி, நம்மோடு வராமல் தள்ளி இருந்த் உசுப்புவனை ஓரம்தள்ளி தொண்டர்கள் உழைக்கட்டும். இன்று நாம் அறுவடை செய்ய வரவில்லை. விதைக்கத்தான் வந்திருக்கின்றோம். விதைத்து வைப்போம். அறுவடை செய்ய ஒரு காலம் வரும். அதுவரை கடமையினை மட்டும் செய்தல் நலம். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu