தேனி மார்க்கெட்டில் வந்து குவிந்த நாட்டு கோழிகள்.
தேனி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு கோழிகள்
உறவினர்களை விருந்தோம்பும் நோக்கத்துடன், வீட்டின் முன் அலைந்து கொண்டிருக்கும் கொண்டைச் சேவல்களைப் பிடித்து, விருந்தளித்து, கூடவே ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுப்பிய மரபு நம்முடையது. சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம்.
எலும்புகளை ஆரோக்கியமாக்கும் நாட்டுக்கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். நம்மூரில் நாட்டுக்கோழி தீமை என்று கூறுபவர் அதிகம். ஏனேனில் அவர்களுக்கு நாட்டுக்கோழியின் நன்மைகள் தெரியாது.
நாட்டுக்கோழி 100 கிராமுக்கு 31 கிராம் ப்ரோடீன்(புரதம் ) உள்ளதால்,நாட்டுக்கோழி புரதத்துக்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும்.
நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச் செய்ய முக்கியமானது ஆகும்.
தேனியில் கிராம விவசாயிகள் நாட்டுக்கோழிகளை கொண்டு வந்து விற்கின்றனர். வியாபாரமும் களை கட்டியது. கிலோவிற்கு 100 ரூபாய் விலையும் உயர்ந்தது. தேனி மார்க்கெட்டில் மட்டுமின்றி நகர் பகுதிகளில் உள்ள கோழி இறைச்சிக்கடைகளில் கூட சில மாதங்களாக ஒரிஜனல் நாட்டுக்கோழி கிடைக்கவில்லை.
நாட்டுக்கோழி போல் இருக்கும் பண்ணைக்கோழி மட்டுமே விற்கப்பட்டு வந்தது. இதனால் நாட்டுக்கோழி பிரியர்கள் மிகவும் வருத்தமடைந்தனர். தேனியில் ஒரிஜனல் நாட்டுக்கோழிக்கு தட்டுப்பாடு என்ற செய்தி கிராமங்களில் பரவியது. இதனை கவனித்த கிராமப்புற விவசாயிகள் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து தாங்கள் வளர்த்த கோழிகளை சந்தையில் கொண்டு வந்து விற்றனர். விற்பனையும் களைகட்டியது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தேனி மார்க்கெட்டில் நாட்டுக்கோழியின் தேவை உள்ளது பற்றி அறிந்தோம். இதனை தொடர்ந்து மாவட்டத்தின் தொலைதுாரப்பகுதிகளில் இருந்து கூட (கம்பம், வருஷநாடு) ஒரிஜனல் நாட்டுக்கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்தோம். பெரும்பாலான கோழிகளை கடை வைத்திருப்பவர்களும், ஓட்டல் வைத்திருப்பவர்களும் வாங்கிச் சென்றனர்.
ஒரிஜனல் நாட்டுக்கோழி கிராமங்களில் உயிருடன் கிலோ 550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாங்கள் தேனி சந்தையில் உயிருடன் ஒரு கிலோ நாட்டுக்கோழி 550 ரூபாய்க்கு விற்றோம். வியாபாரிகள் அதனை வாங்கி கடைகளில் ஒரு கிலோவிற்கு கூடுதலாக 200 ரூபாய் விலை சேர்த்து வைத்து விற்கின்றனர். இனிமேல் ரெகுலராக கோழி கொண்டு வந்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu