அல்வாவும் ஆரோக்கியமான உணவு தானுங்க : படிச்சிட்டு சாப்பிட்டு பாருங்க..!
அல்வா ஸ்வீட் படம்...
பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் அல்வாவிலும் ஆரோக்கிய குணங்கள் நிறைய உண்டு என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றிய ஒரு சிறிய சுவாராஸ்யமான தொகுப்பை பார்க்கலாம்: திருநெல்வேலி என்றால் முதலில் நினைவிற்கு வருவது இருட்டு கடை அல்வா. அல்வாவின் சுவைக்கு பலரும் அடிமையாகி உள்ளனர். இருட்டுக்கடை அல்வா மட்டுமல்ல, பொதுவாக அல்வா எங்கு தயாரிக்கப்பட்டாலும், தரமானதாக இருந்தால், வாங்கி சாப்பிடுங்கள் என்கின்றனர் டாக்டர்கள். காரணம் இந்த அல்வாவில் உள்ள ஆரோக்கியமான பல விஷயங்கள் உள்ளன என கூறுகின்றனர். (சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது.... சண்டைக்கு வராதீங்க...)
இந்த அல்வா செய்முறைக்கான முக்கிய பொருட்கள் சம்பா கோதுமை, கருப்பட்டி, நெய், ஏலக்காய் தூள். இந்த முக்கிய பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய பலன்கள்:
சம்பா கோதுமை: சம்பா கோதுமையில் அதிக அளவு ஊட்டசத்துக்கள் உள்ளது. கால்சியம், நார்சத்து, ஒமேகா 3, ஒமேகா 6, கரைய கூடிய கொழுப்புகள் மற்றும் புரத சத்துக்களை கொண்டுள்ளது.
கருப்பட்டி:சர்க்கரையை விட பல மடங்கு உடலுக்கு நன்மைகளை தருகிறது கருப்பட்டி. சித்த மருத்துவத்திலும், ஆயர்வேத மருத்துவத்திலும் கருப்பட்டிக்கென்றே தனி மருத்துவ குணம் உண்டு. இது ஜீரண பிரச்சினை, நுரையீரல் சார்ந்த கோளாறுகள் மற்றும் தொண்டை சளியை குணப்படுத்தும். இதிலும் புரதம், தாதுக்கள், மாவுசத்து, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ் ஆகிய ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.
நெய்:அளவான அளவு நெய், உடலுக்கு நன்மையே தரும். இது குடல் புண்களை குணப்படுத்தி, சரும அழகை பராமரித்து, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.
ஏலக்காய்:ஏலக்காய் உணவு பொருட்களின் சுவையை மட்டும் கூட்டாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பல் சார்ந்த நோய்களுக்கும், செரிமானத்தை தூண்டவும், மலட்டு தன்மை குணமடையவும் இது வழி செய்யும். புரதம், நார்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் எ, சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதிலும் அதிகம் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu