மகாநதி கமல் மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

இந்த படத்தில் கமலின் மகளாக நடித்த சிறுமியின் பெயர் ஷோபனா விக்னேஷ். தஞ்சாவூரில் பிறந்த இவர் சிறு வயது முதலே கர்நாடிக் சங்கீதத்தை முறையாக கற்றவர். இவர் சிறுமியாக நடித்த மகாநதி படத்தில் வரும் ஸ்ரீரங்கநாதர் என்ற பாடலையும் பாடியுள்ளார். அதன் பின்னர் சரத்குமார் நடித்த அரவிந்தன், பிரசாந்த் நடித்த கண்ணெதிரே தோன்றினால் போன்ற படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.
அதன் பின்னர் சினிமாவில் படுவதை நிறுத்திவிட்டு கர்நாடக சங்கீதத்தை மற்ற நாடுகளுக்கு பரப்பும் முயற்சியை மேற்கொண்டார். இதனால் பல கர்நாடக சங்கீத ஆல்பங்களை வெளிநாடுகளில் வெளியிட்டார். இதனால் இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டது
1996-எழில் இசை வாணி
1997- பண்ணிசை ராணி
2002-இளம் சாதனையாளர்
2003-யுவ கால பாரதி
2015 -இசை செல்வம்
2014 -தமிழ் இசை பேரொளி போன்ற இசைக்கான பல விருதுகளை பெற்றுள்ளார்.
மேலும் சமூக அக்கரைக்கொண்ட இவர் பல இசை நிகழ்ச்சிகளை நடித்தி அதில் இருந்து வரும் பணத்தை பார்வையற்றோர், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர், புற்று நோய் பாதிக்கப்பட்டோர்,ஆகியோரின் நலனுக்குகாக பாடுப்பட்டுள்ளார். இவரது சமூகப்பணி சிறக்க வாழ்த்தலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu