/* */

பூமியின் கடைசி சாலை உங்களுக்கு தெரியுமா?

பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கும் ஆரம்பம் எங்கே முடிவு எங்கே என்று தெரியாது.

HIGHLIGHTS

பூமியின் கடைசி சாலை உங்களுக்கு தெரியுமா?
X

வரைபடத்தின் மூலம் மாநிலத்தை வேண்டுமானால் முடிவு செய்ய முடியும். ஆனால் சாலை எங்கே போய் இறுதியாக முடியும்?

உலகில் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்றும் இருக்கும். அனைவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் செல்வதற்கு சாலை தான் நமக்கு அடித்தளமாக இருக்கிறது. உலகின் கடைசி சாலை எங்கே இருக்கிறது என புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐரோப்பாவில் உள்ள 'E-69 நெடுஞ்சாலை' நார்வேயில் அமைந்துள்ளது. பூமத்தியரேகைக்கு மேலே இந்த சாலை அமைந்துள்ளது. இது தான் உலகின் கடைசி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்த வரை வட துருவத்திற்கு அருகில் அழைத்துச் செல்லும் சாலை இது என்பதாலே இதனை பூமியின் கடைசி சாலை என்கிறார்கள்.

வடக்கு ஐரோப்பாவில் உள்ள Nordkapp ஐ நார்வேயில் உள்ள Oldafevoord கிராமத்துடன் இணைக்கும் இந்த சாலை 129 கி.மீ. தூரத்தை கொண்டது. இதில் உள்ள மிக நீளமான சுரங்கப்பாதை 'நார்த் கேப்' ஆகும். 'நார்த் கேப்' 6.9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த 'நார்த் கேப்' சுரங்கப்பாதை கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே உள்ளது

1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீண்ட சாலை முழுமை பெற 62 ஆண்டுகள் ஆனது. 1992இல் நிறைவு பெற்ற பிறகு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அரிய இடத்தை காண ஏராளமானோர் வருகின்றனர். இந்த சாலையில், காற்று பயங்கர வேகத்தில் வீசுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். கோடை காலத்தில் கூட இந்த சாலையில் பனி பொழியும் என கூறப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்புகள் இந்த பகுதியில் வேலை செய்யாது என்பதால் எந்த நேரத்திலும் இயற்கை சீற்றம் இந்த இடத்தில் நடைபெறும். இங்கு யாரும் தனியாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

Updated On: 29 Jan 2024 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்