வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளை நிலங்களில் தீ வைக்காதீர்கள்: ஆட்சியர் வேண்டுகோள்
X
பைல்படம் தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன்
By - Thenivasi,Reporter |20 March 2022 10:15 AM IST
வனப்பரப்பை ஒட்டியுள்ள விளைநிலங்களில் விளைந்த காய்ந்த கழிவுகளுக்கு தீ வைக்க வேண்டாம் என கலெக்டர் முரளீதரன் வேண்டுகோள்
தேனி மாவட்டத்தில் 1090.84 சதுர கி.மீ., வனநிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் மிகவும் அபூர்வ வகையான மரங்களும், வன உயிரினங்களும் உள்ளன. தற்போது கோடை தொடங்கி உள்ளதால் வெயில் அதிகமாக உள்ளது. விவசாயிகள் வனநிலங்களை ஒட்டியுள்ள தங்கள் நிலங்களில் காய்ந்த பயனற்ற விளைபொருட்களுக்கு தீ வைக்கும் போது, இந்த தீ வனத்திற்குள்ளும் பரவி விடுகிறது. எனவே விவசாயிகள் விளைநிலங்களில் கழிவு பொருட்களுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும். வனத்தில் எங்காவது தீ பரவினால் 04546-252552 மற்றும் 1800 435 4409 என்ற நம்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வனத்தீ பரவாமல் தடுக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியர் முரளீதரன் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu