தி.மு.க., ஒன்றிய செயலாளருக்கு வெட்டு: பேரூராட்சி துணைத்தலைவர் மீது வழக்கு

பைல் படம்.
Union Secretary- தேனி தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ரத்தினசபாபதி. இவருக்கும் வீரபாண்டி பேரூராட்சி துணைத்தலைவர் சாந்தக்குமாருக்கும் பதவி கைப்பற்றுவதில் பெரும் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் இரவில் ரத்தினசபாபதி வீட்டிற்குள் புகுந்த சாந்தக்குமார் உறவினர்கள் ரத்தினசபாபதியை அரிவாளால் வெட்டினர். கட்டையால் தாக்கினர். இந்த சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் சாந்தக்குமார் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பலத்த காயமடைந்த ரத்தினசபாபதி தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் ஒருவரை மட்டும் கைது செய்த போலீசார் மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu