தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க மகளிர் அணி தலைவிக்கு திமுகவில் 'சீட்'

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க மகளிர் அணி தலைவிக்கு திமுகவில் சீட்
X

தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க மாவட்ட மகளிர் அணி தலைவி முனியம்மாள். (சால்வை போர்த்தியிருப்பவர்)

தேனி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி தலைவிக்கு, போடி நகராட்சி வார்டு கவுன்சிலர் சீட்டை திமுக வழங்கி உள்ளது.

தேனி மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வில் சீட் கிடைக்காத குட்டித்தலைவர்களை அ.தி.மு.க. வலைவிரித்து துாக்கி சீட் வழங்கி வருகிறது. இதே பாணியை, தி.மு.க.வும் கையில் எடுத்துள்ளது. அ.தி.மு.க.வின் அதிருப்தி வேட்பாளர்களை துாக்கி தி.மு.க.வில் சீட் வழங்குகிறது.

அதன்படி, நேற்று தேனி மாவட்ட மகளிர் அணி தலைவி முனியம்மாளை, போடி தி.மு.க.,வின் முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்று முனியம்மாள் தி.மு.க.வில் ஐக்கியமானார். அவருக்கு, போடியில் ஒரு வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai market future