திமுக.,வில் சீட் இல்லையா? எங்க கிட்ட வாங்க நாங்க தர்றோம்: தேனி அதிமுக

திமுக.,வில் சீட் இல்லையா? எங்க கிட்ட வாங்க நாங்க தர்றோம்: தேனி அதிமுக
X
சீட் காலியாக இருக்கு... பிடிச்சா நின்று ஜெயிச்சுக்கங்க... பிடிக்காட்டி நண்பர்களாக இருப்போம். உள்ளாட்சித் தேர்தல் பர பர

தி.மு.க.,வில் சீட் இல்லையா? எங்க கிட்ட வாங்க... நாங்க தர்றோம் என தி.மு.க.,வின் அதிருப்தி நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., வலை விரித்துள்ளது.

தேனி மாவட்ட தி.மு.க.,வில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு வேட்பாளர்கள் தேர்வில் கடும் குழப்பம் நிலவுகிறது. நாளையுடன் வேட்புமனு முடிவடையும் நிலையில், இன்று மாலை 5 மணி வரை தி.மு.க.,வின் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. அ.தி.மு.க.,வும் கடுமையான பரமபத விளையாட்டை விளையாடி வருகிறது. இரண்டு நாளில் மூன்று முறை தனது வேட்பாளர் பட்டியலை மாற்றி விட்டது. இன்னும் இந்த பட்டியல் மாறலாம் என அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர்.

காரணம் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். நான் இந்த காரணத்திற்காக ஜெயிப்பேன். சீட் தாருங்கள் என யாராவது வலுவான உறுதி மொழி கொடுத்தால், சரியான காரணங்களை சொன்னால் அவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து அ.தி.மு.க., அறிவிக்கிறது. குறிப்பாக தி.மு.க.,வின் வல்லமை வாய்ந்த பல குட்டித்தலைவர்களுக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களை எல்லாம் எங்க கிட்ட வாங்க... சீட் காலியாக இருக்கு... பிடிச்சா நின்று ஜெயிச்சுக்கங்க... பிடிக்காட்டி நண்பர்களாக இருப்போம் என்ற பாணியில் அ.தி.மு.க., வலை விரித்து வருகிறது. தற்போதே பல தி.மு.க., குட்டித்தலைவர்கள் அ.தி.மு.க., விரித்த வலையில் விழுந்து விட்டனர். இதனால் விழிபிதுங்கும் தி.மு.க., இப்படியே போனால் சிக்கலாகி விடும், எனக்கருதி அ.தி.மு.க., எடுத்த அதே பாணியினை பின்பற்றி சில முக்கிய அ.தி.மு.க., குட்டித்தலைவர்களை துாக்கி தி.மு.க.,வில் நிறுத்துகிறது. ஏற்கனவே குழப்பம் நிலவிய சூழலில் இப்போதைய நடைமுறை புதிய குழப்பத்தை உருவாக்கி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!