தேனி 27வது வார்டு திமுக வேட்பாளரிடம் ரோடு, சாக்கடை வசதி கேட்ட பொதுமக்கள்
தேனி நகராட்சி இருபத்தி ஏழாவது வார்டு திமுக., வேட்பாளர் அய்யனார்பிரபு வீடு, வீடாக ஓட்டு சேகரித்தார்.
தேனி நகராட்சி 27வது வார்டு திமுக., வேட்பாளராக இரண்டாம் முறையாக களம் இறங்கி உள்ளார் அய்யனார்பிரபு. கடந்த முறை வெற்றி பெற்றபோது இவர் பல நலத்திட்ட உதவிகள் செய்தார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் ஆறு ஆண்டுகள் தனி அதிகாரி பொறுப்பில் நகராட்சி நிர்வாகம் இருந்தது. அப்போது வார்டு தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. இன்று காலை தி.மு.க., வேட்பாளர் அய்யனார்பிரபு தான் போட்டியிடும் 27வது வார்டில் ஓட்டு கேட்டு சென்றார்.
அப்போது வார்டு மக்கள், 'வைகை குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததும், குடிநீர் பிரச்னை தீர்ந்து விட்டது. ஆனால் ரோடு வசதிகள் தரம் குறைவாக உள்ளன. சாக்கடை வசதிகள் பெரும் பற்றாக்குறையுடன் உள்ளது. தெருவிளக்குகள் இல்லை. வார்டில் மிகப்பெரிய சாக்கடை பாலம் தேவைப்படுகிறது. பல வார்டுகளின் கழிவுநீர் இப்பகுதியில் வருவதால், இந்த நீர் கடந்து செல்ல வசதியாக பெரிய அளவில் கழிவுநீர் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த வேட்பாளர் அய்யனார்பிரபு தான் வெற்றி பெற்றதும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu