தேனி நகராட்சி 32வது வார்டில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் மும்முரம்

தேனி நகராட்சி 32வது வார்டில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் மும்முரம்
X

வழக்கறிஞர் செல்வம்,  தான் போட்டியிடும் முப்பத்தி இரண்டாவது வார்டில் தனது குழுவினருடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி நகராட்சி 32வதுவார்டில் தி.மு.க.,வினர் தீவிர ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 32வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் செல்வம் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வழக்கறிஞர் செல்வம் தற்போது தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

திமுக வேட்பாளருக்கு, வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். இத்தேர்தலில் தங்களுக்கு சூழ்நிலை மிகவும் சாதகமாக உள்ளதாக தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare