இனி மக்களுடன் நேரடி தொடர்பு: திட்டங்களை தயாரிக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

இனி மக்களுடன் நேரடி தொடர்பு:  திட்டங்களை தயாரிக்க  கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
X

பைல் படம்.

இனிமேல் அரசுக்கும் மக்களுக்கும் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தும் திட்டங்களை தயாரித்து அதனை செயல்படுத்த முக்கியத்துவம் தர வேண்டும் என தி.மு.க., அரசு அறிவுறுத்தி உள்ளது.

யார் உதவியும் இன்றி அரசுக்கும் மக்களுக்கும் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான திட்டங்களை தயாரித்து கொடுங்கள் என கலெக்டர், எஸ்.பி.,க்களுக்கு தி.மு.க., அரசு அறிவுறுத்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., யாரும் எதிர்பார்க்காத அளவு பெரும் வெற்றியை பெற்றுள்ளது. தி.மு.க.,வினரின் உழைப்பே இதற்கு முழு முதல் காரணமாக இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் மீது இருந்த இமேஜ் முக்கிய காரணமாக இருந்தது. இதனை தக்க வைக்க தி.மு.க., வலுவாக திட்டமிட்டு வருகிறது.

வரும் தேர்தல்களில் தி.மு.க., கட்சியினர் வேலை பார்த்தாலும், தி.மு.க., மட்டுமல்ல, எத்தனை பேர் பணம் கொடுத்தாலும் மக்கள் இனி தி.மு.க.,விற்கு தான் ஓட்டளிக்க வேண்டும். அந்த அளவு மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் திட்டங்களை வகுத்து கொடுங்கள் என அத்தனை கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுக்கு ஆளும் கட்சி அறிவுறுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின், சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தி.மு.க., ஐபேக் டீமும் இதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறது. யாரும் எதிர்பார்க்காத, யாரும் இதுவரை செய்யாத புதிய திட்டங்கள் விரைவில் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு