கேட்ட சீட் கிடைக்காத அதிருப்தியில் தேனியில் தனித்து களம் இறங்குகிறது காங்கிரஸ்

கேட்ட சீட்  கிடைக்காத அதிருப்தியில் தேனியில் தனித்து களம் இறங்குகிறது காங்கிரஸ்
X

பைல் படம்

தேனி மாவட்டத்தில் கேட்ட இடங்களை திமுக தராததால் காங்கிரஸ் கட்சி தனித்து வேட்புமனு தாக்கல் செய்து வருகிறது

தேனி மாவட்டத்தில் தி.மு.க. கேட்ட இடங்களை தங்களுக்கு ஒதுக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் அனைத்து வார்டுகளிலும் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்., கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை. தேனி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்ட இடங்களை திமுக ஒதுக்கீடு செய்யவில்லையாம். மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான இடங்களை மட்டுமே தி.மு.க கொடுத்தது. அப்படி ஒதுக்கிய இடங்களும், வெற்றி வாய்ப்பு என்பதே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியாத இடங்களாகும். இதனால் கடும் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சியினர் அனைத்து இடங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறது. வேட்புமனு வாபஸ் வரை பேச்சு நடத்துவோம். இடம் கிடைத்தால் அதற்கேற்ப வாபஸ் பெற்று கூட்டணியில் போட்டியிடுவோம். இல்லையென்றால் தனித்தே போட்டியிடுவோம் என மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!