தினகரன் தேர்தல் வேலை : தி.மு.க., அ.தி.மு.க., அதிர்ச்சி..!

தினகரன் தேர்தல் வேலை : தி.மு.க., அ.தி.மு.க., அதிர்ச்சி..!
X

தேனி மாவட்ட RSS பொறுப்பாளர் பாலகிருஷ்ணன்.

தேனி தொகுதியில் டி.டி.வி., தினகரன் சைலன்ட்டாக செய்து வரும் வேலைகள் பிற கட்சிகளை அதிர வைத்துள்ளன.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினை சேர்ந்த முக்கிய நிர்வாகி பாலகிருஷ்ணன் (இவர் கடந்த 1991ம் ஆண்டு தேனி தொகுதிக்கான லோக்சபா தேர்தலில் பா.ஜ.க., வேட்பாளராக களம் இறங்கியவர்) கூறியதாவது: தேனி மாவட்டத்தில் நகராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள், கிராமங்கள், சிறிய குடியிருப்புகள் என அத்தனை இடங்களிலும் தினகரன் சைலன்ட் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

இவர்கள் அந்த பகுதி மக்களிடம் பழகி அவர்களின் மனநிலை, அங்கு எந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. அதனை எப்படி டி.டி.வி., பக்கம் திருப்புவது, அதற்கு யாரை பயன்படுத்துவது என்ற துல்லியமான விவரங்களை தயாரித்து தினகரனுக்கு அனுப்பி வருகின்றனர். டி.டி.வி., தினகரன் இதற்கென ஒரு ரகசிய அலுவலகம் அமைத்துள்ளார். அந்த அலுவலகத்திற்கு இந்த பொறுப்பாளர்கள் சேகரிக்கும் தகவல் செல்லும்.

அந்த தகவல் அடிப்படையில் அங்கு யாரை அனுப்புவது என முடிவு செய்து, அந்த நபரை தேர்வு செய்து அனுப்பி ஓட்டுக்களை கவர்ந்து வருகின்றனர். ஜாதி ரீதியாக, மத ரீதியாக, சங்கங்கள் ரீதியாக, அரசியல் ரீதியாக ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படும் நபர்கள் துல்லியமாக தேர்வு செய்யப்பட்டு தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு பகுதியில் டி.டி.வி., தினகரன் செய்த பணிகள் இன்னும் அழியாமல் உள்ளன. இந்த விவரங்கள் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. அதற்கு பின் வந்தவர்கள் யாரும் வேறு எந்த பணிகளும் செய்யவில்லை என்பதும் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. இவ்வளவு வேலைகள் செய்த டி.டி.வி., தினகரனை ஏற்கனவே தோற்கடித்து பெரும் தவறு இழைத்து விட்டோம். இந்த முறை அந்த தவறை செய்யப்போவதில்லை என கூறும் உள்ளூர் முக்கிய தலைவர்கள், தங்கள் பகுதி ஓட்டுக்களை பெற என்ன வழி என்பது குறித்து தெளிவான திட்டங்கள், வழிகாட்டுதல்களை அந்த ரகசிய குழுவிற்கு வழங்கி வருகின்றனர்.

மாற்றுக்கட்சி அனுதாபிகள் யார், தினகரனுக்கு வீக் ஆக உள்ள கிராமங்கள், குடியிருப்புகள் எவை. அந்த பகுதியில் ஓட்டுக்களை தினகரன் பக்கம் திருப்ப என்ன செய்ய வேண்டும். மாற்றுக்கட்சியில் ஒவ்வொரு இடத்திலும் யார் தீவிரமாக பணியாற்றுகின்றனர். அவர்களை தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்கு சரியான நபர் யார்?

அதற்கான திட்டம் என்ன என்பது உட்பட அத்தனை விவரங்களையும் தெளிவாக திட்டமிட்டு காரியம் சாதித்து வருகின்றனர். இதுவரை எந்த தேர்தலிலும் இப்படி சைலன்ட் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது இல்லை. இந்த முறை தினகரன் செய்துள்ள இந்த ரகசிய திட்டங்கள், பணிகள் வெற்றி பெற்றால் அவரது தேர்தல் வெற்றியும் அபாரமாக இருக்கும். மொத்தத்தில் தினகரனுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. ஜுன் 4ம் தேதி நான் சொல்வதில் உள்ள உண்மை மற்றவர்களுக்கு புரியும். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!