அதிதி சங்கருக்கு அழைப்பு விடுத்த தனுஷ்..! வேண்டாம் மறுத்த இயக்குனர் ஷங்கர்

அதிதி சங்கருக்கு அழைப்பு விடுத்த தனுஷ்..!  வேண்டாம் மறுத்த இயக்குனர் ஷங்கர்

பைல் படம்.

Aditi Shankar Actress - தமிழ் சினிமா உலகில் சைலண்டாக இருந்து கொண்டு தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.

Aditi Shankar Actress -இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனுஷின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும்.. அவருக்கு நிகராக நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் போன்றவர்களின் நடிப்பும் சிறப்பாக இருந்தது இந்த படம் இதுவரை மட்டுமே சுமார் 65 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி 100 கோடி கிளப்பில் இணையும் என படத்தைப் பார்த்த பலரும் சொல்லி வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் கையில் வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இந்த படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவதால் தனுஷின் மார்க்கெட் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து தான் தயாரிக்கும் படங்களிலேயே தனுஷ் நடிக்க இருக்கிறாராம் அந்த வகையில் தனுஷ் காமெடி கலந்த கமர்சியல் படத்தில் நடிக்க இருக்கிறாராம் இந்த படத்தில் தனக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்தால் சூப்பராக பொருந்தும் என கருதி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளாராம். ஆனால் அதிதி முடிவெடுப்பதற்கு முன்பாக அவரது அப்பா ஷங்கர் தான் முடிவெடுக்க வேண்டுமாம்.

அவர் அதிதி எந்த ஒரு பிரச்சனையிலும் கிசுகிசுக்களிலும் சிக்கக் கூடாது என நோட்டமிட்டு வருகிறாராம் ஆனால் தனுஷ் படங்களில் நடிக்கும் நடிகைகள் அவருடன் கிசுகிசுவில் சிக்குவார்கள். அதனால் தற்போது தன் மகளை தனுஷ் படத்தில் நடிக்க வைத்தால் கிசுகிசுவில் அவரும் மாட்டிக் கொள்வார் என கருதி தற்போது தனுஷ் படத்தில் நடிக்க வேண்டாம் என சொல்லி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Read MoreRead Less
Next Story