தேனி மாவட்ட கோயில்களுக்கு நாளை முதல் ஒரு வாரம் பக்தர்கள் செல்ல தடை

தேனி மாவட்ட கோயில்களுக்கு நாளை முதல் ஒரு வாரம் பக்தர்கள் செல்ல தடை
X

தேனி கலெக்டர் முரளிதரன் 

தேனி மாவட்ட கோவில்களில் நாளை முதல் ஒரு வாரம் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்

தேனி மாவட்டத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி கலெக்டர் முரளிதரன் கூறியதாவது: ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி ஆடிக்கிருத்திகை, ஆக., 3ம் தேதி ஆடிப்பெருக்கு பண்டிகை, ஆக., 8ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலங்களில் பக்தர்கள் அதிகளவில் கோயில்களுக்கு வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.

எனவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் நாளை ஆக., 2ம் தேதி முதல் ஆக., 8ம் தேதி வரை ஏழு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரைகளில் திதி, தர்ப்பணம் செய்யவும் அனுமதி இல்லை. திருக்கோயில்களில் வழக்கம் போல் கோயில் பணியாளர்கள் மூலம் பூஜைகள் நடைபெறும். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story