கூடலூர்: சுத்தப்படுத்தப்படாத குடிநீர் தொட்டியால் நோய் பரவும் அபாயம்

கூடலூர்: சுத்தப்படுத்தப்படாத குடிநீர் தொட்டியால் நோய் பரவும் அபாயம்
X

லோயர்கேம்ப் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.

தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட லோயர்கேம்ப் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது.

தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட லோயர்கேம்ப் கேண்டீன் அருகே நகராட்சி குடிநீர் தொட்டி உள்ளது. இதற்குள் செங்கல், மண், மணல், பாட்டில்கள் கிடக்கின்றன. சுத்தப்படுத்தப்படாத இந்த தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் தண்ணீரை தான் இப்பகுதி மக்கள் வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்துகின்றனர்.

சில நேரங்களில் இந்த தண்ணீரை குடிக்கவும் பயன்படுத்துவதாகவும், தொட்டியை சுத்தப்படுத்தாமல் இவ்வளவு மோசமாக வைத்துள்ளதாக, மக்கள் புலம்புகின்றனர். கூடலுார் நகராட்சி நிர்வாகம் இந்த தொட்டியை சுத்தப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story