போடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இரண்டு பேர் கைது

போடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய  இரண்டு பேர் கைது
X

மான் பைல் படம்.

போடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ்(வயது 23,) சிவக்குமார்(வயது 39,) மற்றும் மருதுபாண்டி, சீனிவாசன் ஆகிய நான்கு பேரும், போடி வனப்பகுதியில் மான்வேட்டை நடத்தினர். நாய்களை அழைத்துக் கொண்டு அருங்குளம், உலக்குருட்டி வனப்பகுதியில் இவர்கள் மிளா வகை மான்களை வேட்டியாடியுள்ளனர். வேட்டையாடிய மானை அடித்து இறைச்சியை பையில் வைத்துக் கொண்டு டூ வீலரில் போடி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது வனத்துறை அதிகாரிகளான ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் செல்வராஜ், வனக்காப்பாளர் காளிரத்தினம் இவர்களது டூ வீலரை சோதனை செய்து, மான் இறைச்சியை கைப்பற்றி, சூரியபிரகாஷையும், சிவக்குமாரையும் கைது செய்தனர். மொத்தம் 40 கிலோ எடையுள்ள மான்கறி, கத்தி, டூ வீலர், உட்பட பல பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.உடன் வந்த மருதுபாண்டி, சீனிவாசன் தப்பி ஓடி விட்டனர். இவர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!