மடிந்து வரும் மைக்செட் தொழில்.. வாழ வழிதேடுகிறோம்.. உரிமையாளர்கள் சங்கம் உருக்கம்
பைல் படம்.
மைக்செட் என்பது மக்கள் அத்தியாவசிய தேவைகளுள் மிகவும் ஒரு அங்கமாக விளங்குகிறது. எந்த மதமானலும், எந்த இனமானாலும், மைக்செட் படிக்காத எந்த ஒரு வீடும் பள்ளிகளும், கல்லூரிகளும், கோவில்களும், மசூதிகளும், தேவாலயங்களும் இருக்கவே முடியாது.
மைக்செட் கட்டினால் ஆவலாக பாட்டு கேட்பதற்காக வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டிலிருந்து பாட்டு கேட்டுக் கொண்டு ரசித்த வானொலி இல்லாத அது ஒரு அழகிய கனா காலம். இன்று உலகே நம் கைக்குள் அடங்கி எந்த மொழியானாலும் எந்த படமாக இருந்தாலும் நினைத்த பாடலை நினைத்தபடி நினைத்த நேரத்தில் கேட்கும் விஞ்ஞான தொழில்நுட்ப காலம். விஞ்ஞான வளர்ச்சிக்கு மைக்செட் நண்பர்களின் பங்கு சிறிதாக இருந்தாலும், பழய பாடல்களை ஒழுக்கமான முறையில் எப்படி ஒலிபரப்ப வேண்டும் என்று வானொலிக்கும் திரையுலகத்திற்கும் கற்று கொடுத்தது மைக்செட் தான்.
பழைய பாடல்களை கேட்பதற்கும், ஒலிபரப்புவதற்கும் அதிக ரசனையும் உள்ள தென்தமிழத்தின் மதுரை, உசிலம்பட்டி, தேனி, கம்பம் உள்ளிட்ட தமிழகத்தில் பகுதிகள் உள்ளன. மைக்செட் இருக்கும் வரை பழய பாடல்களும், மறைந்த பாடகர்கள், நடிகர்கள், கவிஞர்கள் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். அதிக முதலீட்டுடன் அதிக லாபம் இல்லாமல் பொது விழாக்களில் வரும் சல சலப்பு, கைகலப்பு வந்தாலும் அதற்கு மைக்செட் தான் காரணம் என்று காவல்துறையிடம் சம்பந்தமில்லாமல் அடி வாங்கியும், மிதி வாங்கியும் கஷ்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் கடந்தும், இரவு பகல் பாராமல் தன் தொழிலை சேவையாக செய்தும் பொதுமக்களிடம் இன்று மதிப்பிழந்து நிற்கிறது மைக்செட் தொழில். இத்தொழிலை காப்பாற்ற கரண்ட் அடித்து இறந்தவர்களும், டவர் சாரத்தில் இருந்து கீழே விழுந்து கை கால் முறிந்ததால் இதுவரை சரியாகதவர்களும் இன்னமும் இருக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் மைக்செட்டிற்க்கு பொற்காலமாக மாற பொதுமக்கள் தான் பேராதரவு தர வேண்டும். பாரம்பரியமாக மைக்செட் தொழிலில் ஈடுபட்டு வரும் நண்பர்களுக்கும், தலைமுறைகள் கடந்தும் இன்றும் பணியை தூய்மையாக செய்து வரும் மைக்செட் நிறுவனங்களுக்கும், பழய பாடல்களை கேட்டு இன்றும் ரசித்து கொண்டிருக்கும் ரசிக பெருமக்களுக்கும், தியாகம் நிறைந்த தொழிலாக கருதி இப்பதிவை சமர்பிக்கிறோம். என்றும் உங்கள் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் வாழ வழிதேடுகிறோம் என்று மதுரை, தேனி மாவட்ட மைக்செட் உரிமையாளர்கள் சங்கத்தினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu