இருண்டு கிடக்கும் தேனி நகர தெருக்கள்- இந்து எழுச்சி முன்னணி புகார்

இருண்டு கிடக்கும் தேனி நகர தெருக்கள்-  இந்து எழுச்சி முன்னணி புகார்
X

இந்து எழுச்சி முன்னணி வார வழிபாட்டு கூட்டம் தேனி பொம்மையகவுண்டன்பட்டி அலுவலகத்தில் நடந்தது.

தேனி நகரில் பல தெருக்களில் உள்ள மின்விளக்குகள் எரிவதில்லை என இந்து எழுச்சி முன்னணி புகார் அளித்துள்ளது.

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வாரவழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராமராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பல ஊர்களில் தெருக்களுக்கு தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை வைக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு, தி.மு.க., அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மே 29ம் தேதி இந்து எழுச்சி முன்னணியின் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். தேனியில் பெரியகுளம் ரோடு உட்பட பல தெருக்களில் மின்விளக்குகள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த விளக்கும் எரிவதில்லை. இரவு நேரத்தில் தேனி இருண்டு கிடக்கிறது. விளக்குகளை எரியவி்ட்டு, இருளை நீக்கும் முயற்சிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!