செங்கல் சூளைகளுக்கு தினமும் பல நுாறு டன் மரம் வெட்டி கடத்தல்
![செங்கல் சூளைகளுக்கு தினமும் பல நுாறு டன் மரம் வெட்டி கடத்தல் செங்கல் சூளைகளுக்கு தினமும் பல நுாறு டன் மரம் வெட்டி கடத்தல்](https://www.nativenews.in/h-upload/2022/06/15/1545934--.webp)
தேனி வருஷநாட்டில் செங்கல் சூளைக்காக பகல் நேரத்தில் டிராக்டரில் மரம் கடத்திச் செல்லப்படுகிறது.
Today Theni News - தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் கிடைக்கும் மண், மணல் மூலம் தயாரிக்கப்படும் செங்கல் தமிழகத்தின் முதல்தர செங்கலாக கருதப்படுகிறது. இங்கிருந்து தமிழகம் முழுவதும் வியாபாரிகள் செங்கல் வாங்கிச் செல்கின்றனர். தினமும் பல நுாறு டன் செங்கல்கள் தமிழகம் முழுவதும் செல்கின்றன. இதனை தயாரிக்க வருஷநாடு பகுதிகளில் மட்டும் நுாற்றுக்கணக்கான செங்கல்சூளைகள் உள்ளன.
இந்த செங்கல் சூளைகளுக்கு தேவையான மரத்தை (தினமும் பலநுாறு டன்) அருகில் உள்ள வனங்களில் இருந்தே வெட்டி கடத்தி வருகின்றனர். அதாவது மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதிகளில் இருந்தே வெட்டி கடத்தி வருகின்றனர். பகல் நேரங்களில் பகிரங்கமாகவே இந்த கடத்தல் நடக்கிறது. மரம் கடத்தல்காரர்களுக்கு வனத்துறை முழு அளவில் உதவிகளும் செய்கிறது. தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இதனை கண்டும், காணாததும் போல் உள்ளனர். கிடுக்குப்பிடி போட்டு இந்த கடத்தலை தடுக்காவிட்டால், வனங்கள் காலியாகிவிடும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu