பணமோசடி புகார்களுக்கு உதவிகள் கேட்க சைபர் கிரைம் எண்
சைபர் கிரைம்களின் எண்ணிக்கையும், நுட்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எப்படித்தான் மக்கள் உஷாராக இருந்தாலும், மோசடி கும்பல் ஏதாவது ஒரு வகையில் பணத்தை எடுத்து விடுகின்றனர். குறிப்பாக ஒருவர் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். அவரது கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்ற விவரங்களை மோசடிக் கும்பல் எப்படித்தான் கண்டறிகின்றனரோ தெரியவில்லை. வங்கி கணக்கில் குறைந்த அளவு பணம் வைத்திருப்பவர்களை இந்த கும்பல் ஏமாற்றவில்லை. குறைந்த அளவு பணம் வைத்திருக்கும் பல கோடிப்பேர் இந்த கும்பலின் டார்க்கெட்டிற்குள்ளேயே வரவில்லை. இந்த வங்கி கணக்கு விவரங்களை அவர்கள் எப்படி சேகரிக்கின்றனர் என்பது மிகப்பெரிய புதிராகவே இருந்து வருகிறது.
ஸ்கிரீன் ஷேரிங் ஆப் பிராடு, மேட்ரிமோனியல் பிராடு, கிப்ட் பாக்ஸ் பிராடு, வாலட் பிராடு, வங்கி பிராடு, லோன் பிராடு, ஓ.டி.பி., பிராடு, ஜாப் பிராடு உள்ளிட்ட பிராடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இப்படி எந்த வகையில் பணம் ஏமாந்தாலும், அவர்கள் 1930 என்ற இலவச எண்ணுக்கு புகார் செய்யலாம் என தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உதவிகள் கேட்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரின் உதவி எண் 04546 294042, 294043 என்ற எண்ணில் புகார் செய்யலாம். http://cybercrime.gov.in என்ற வெப்சைட்டிலும் புகார் செய்யலாம் எனக்கூறியுள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu