தேனி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு மேல் சைபர் கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு மேல் சைபர் கொரோனா தொற்று
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக எட்டாவது நாளாக இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்தில் நேற்று 695 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை இதன் முடிவுகள் வெளியானது.

இதில் ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படவில்லை. இந்த மாதத்தில் மட்டும் 8 நாட்களுக்கு மேல் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி