பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க்கில் இருந்து மாறும் வாடிக்கையாளர்கள்
பைல் படம்.
தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ஜனவரி மாதத்தில், 72 ஆயிரம் அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகிறது. இதன்படி, தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டிசம்பரில் மாதத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சேவை பயன்டுத்துவோரின் எண்ணிக்கை, 96.43 லட்சமாக இருந்தது. இது, ஜனவரியில் 97.15 லட்சமாக அதிகரித்து உள்ளது.
இதன்படி, ஜனவரியில் மட்டும் 72 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., சேவையை கூடுதலாக பயன்படுத்த துவங்கி உள்ளனர். ஆனால், டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் உயர்வு சதவீதம் குறைந்துள்ளது. இதே போல பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் சேவை 9.74 லட்சத்தில் இருந்து, 9.71 லட்சமாக குறைந்துள்ளது. லேண்ட்லைன் சேவைக்கு பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தரப்பில் முறையான அணுகுமுறை இல்லாததால், இந்த எண்ணிக்கை மாதந்தோறும் குறைந்து வருகிறது. இதே போல, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இருந்து, வேறு நிறுவன சேவைக்கு மாறுவதற்கு, ஜனவரியில் மட்டும் 50 ஆயிரம் பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களையும் சேர்த்தால் பி.எஸ்.என்.எல்.,ல் இருந்து வேறு நிறுவன சேவைக்கு மாற இதுவரை 5.4 கோடி வாடிக்கையாளர்கள், வேறு நிறுவனத்திற்கு மாற கோரிக்கை வைத்து உள்ளனர். இதில் பெரும்பாலானோர் மாறி விட்டனர். வேகமாக மாறியும் வருகின்றனர் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu