சின்னமனுாரில் வேன் கவிழ்ந்து விபத்து: மில் தொழிலாளர்கள் 15 பேர் காயம்

சின்னமனுாரில் வேன் கவிழ்ந்து விபத்து: மில் தொழிலாளர்கள் 15 பேர் காயம்
X

சீலையம்பட்டி பூ மார்க்கெட் அருகே, தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்த விபத்தில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தேனி மாவட்டம், கம்பம் ரோடு, சீலையம்பட்டி பூமார்க்கெட் அருகே, வேலைக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு, தனியார் மில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

போலீசாரும், தீயணைப்பு மீட்புப்பணித் துறையினரும், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், சின்னமனூர் அரசு மருத்துவமனை, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த இடத்தில், ரோடு வளைவு முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்து நடப்பதாக, அப்பகுதியினர் கூறுகின்றனர். எனவே, விபத்தினை தடுக்க போலீஸ், வருவாய், வட்டார போக்குவரத்து துறை பரிந்துரைப்படி ரோடு வளைவினை சரி செய்ய வேண்டும். இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!