கம்பம் அருகே அனுமதியின்றி மாட்டுவண்டி ரேஸ் ஒத்திகை

கம்பம் அருகே அனுமதியின்றி மாட்டுவண்டி ரேஸ் ஒத்திகை
X

அனுமதியின்றி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தய ஒத்திகை.

கம்பம் அருகே சுருளிப்பட்டியிலிருந்து சுருளி அருவி செல்லும் சாலையில் அனுமதியின்றி மாட்டுவண்டி ரேஸ் ஒத்திகை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி ரேஸ், கிடா முட்டு, சேவல் சண்டை போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் இந்த உத்தரவு மீறப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

கம்பத்தில் அடிக்கடி மாட்டு வண்டி பந்தயம் நடக்கும். இந்த ஆண்டு நடைபெறும் பந்தயத்திற்கான தேதி எதுவும் முடிவாகவில்லை. மாவட்ட நிர்வாகமும் அனுமதி தரவில்லை. அதற்குள் கம்பம் அருகே சுருளிப்பட்டியில்- இருந்து சுருளி அருவி செல்லும் ரோட்டில் மாட்டு வண்டி பந்தயத்திற்கான ஒத்திகை நடந்து வருகிறது.

பொதுமக்களின் பார்வையில் இருந்து தப்ப மாலை நேரம், அல்லது அதிகாலை நேரத்தில் ரேஸ் ஒத்திகை நடைபெறுகிறது. இதனால் தோட்டங்கள், வயல்களில் வேலைக்கு செல்பவர்கள் வேலையில் இருந்து திரும்புபவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த ரேஸ் ஒத்திகை நடப்பதை முறைப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
scope of ai in future