கம்பம் மெட்டில் ஜீப் மீது லாரி மோதல் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேர் காயம்

கம்பம் மெட்டில் ஜீப் மீது லாரி மோதல்  தோட்டத் தொழிலாளர்கள் 8 பேர் காயம்

கம்பம் மெட்டில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்றது

தேனி மாவட்டத்தில் இருந்து ஏலம், டீ, காபி, ரப்பர் தோட்ட வேலைகளுக்கு தினமும் பல ஆயிரம் தொழிலாளர்கள் கேரளா சென்று வருகின்றனர்.

கேரளாவில் இருந்து தமிழக தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு கம்பம் வந்த ஜீப் மீது லாரி மோதிய விபத்தில், தோட்ட தொழிலாளர்கள் எட்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து ஏலம், டீ, காபி, ரப்பர் தோட்ட வேலைகளுக்கு தினமும் பல ஆயிரம் தொழிலாளர்கள் கேரளா சென்று வருகின்றனர். இவர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் தரக்குறைவானவை, அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அதிக வேகத்தில் செல்கின்றன என தொடர்ந்து புகார்கள் வந்தாலும் யாரும் இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலையில், இன்று மாலை கேரளாவில் ஏலத்தோட்ட பணிகள் முடிந்து ஒரே ஜீப்பில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கம்பம் திரும்பிக் கொண்டிருந்தனர். கம்பம்மெட்டு ரோட்டில் எதிரே வந்த லாரி மீது ஜீப் மோதியது. இந்த விபத்தில் தோட்ட தொழிலாளர்கள் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story