தேனி- வருஷநாடு மலைச்சாலையில் புதர்களை அகற்றும் பணி மும்முரம்

தேனி- வருஷநாடு மலைச்சாலையில் புதர்களை அகற்றும் பணி மும்முரம்
X

தேனி வருஷநாடு மலைச்சாலையில் கண்டமனுார் அருகே இரு ஓரங்களிலும் வளர்ந்துள்ள புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

தேனி- வருஷநாடு மலைச்சாலையிீன் ஓரங்களில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

வருஷநாடு மலைச்சாலையில் இருபுறமும் புதர்களை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தேனியில் இருந்து வருஷநாடு செல்லும் மலைச்சாலை பெரும் பகுதி மலைப்பாதையில் செல்கிறது. கடந்த சில மாதங்களாக பெய்யும் மழையால் ரோட்டின் இருபுறமும் அதிகளவு புதர்கள் வளர்ந்துள்ளன. இந்த புதர்கள் ரோட்டின் பார்வையை மறைத்ததால், பஸ்கள், இதர வாகனங்கள் செல்வது சிரமமாக இருந்து வந்தது.

இது குறித்து பொதுமக்கள் புகார் எழுப்பியதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை இருபுறமும் வளர்ந்துள்ள புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Tags

Next Story