விவசாய நிலங்களுக்கு சாலை வசதி; நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள் முறையீடு

விவசாய நிலங்களுக்கு சாலை வசதி; நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள் முறையீடு
X

விவசாய நிலங்களுக்கு  சாலை வசதி கேட்டு, விவசாயிகள் கூடலுார் நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்டம் கூடலுாரில் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்துத் தரக்கோரி நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

தேனி மாவட்டம், கம்பம் ஏகலுாத்து, மச்சக்கால் பகுதியில் இருந்து கழுதைமேட்டுப்புலம் வரை பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் மானாவாரி மற்றும் தோட்டக்கலை நிலங்கள் உள்ளன. இங்குள்ள நிலங்களில் இருந்து சாகுபடி செய்யப்படும் காய்றிகள், விவசாய விளைபொருட்களை கொண்டு வர பாதை வசதி இல்லை.

தற்போது உள்ள மண் பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே ஏகலுாத்து மச்சக்கால் பகுதியில் இருந்து கழுதைமேட்டுப்புலம் வரை தார்ரோடு அமைத்து தர கூடலுார் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் நகராட்சி கமிஷனர் சேகரிடம் மனு கொடுத்தனர். நகராட்சி கமிஷனரும் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

Tags

Next Story