இடுக்கி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' : குமுளி - முண்டகயம் போக்குவரத்து துண்டிப்பு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குமுளியில் இருந்து முண்டக்கயம் செல்லும் ரோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குமுளியில் இருந்து முண்டகயம் செல்லும் ரோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இன்று பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குமுளியில் இருந்து முண்டக்கயம், சபரிமலை செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை சரி செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu