திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த முறையீடு

திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில்பாதை  திட்டத்தை செயல்படுத்த முறையீடு
X

திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில்பாதை குழுவினர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தேனி கலெக்டரிடம் போராட்டக்குழுவினர் மனு

திண்டுக்கல்லில் இருந்து போடி வழியாக லோயர்கேம்ப் வரை 133.5 கி.மீ., துாரம் அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இத்திட்ட போராட்டக்குழுவினர் கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது: இத்திட்டத்தை செயல்படுத்த 2014ம் ஆண்டே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. திண்டுக்கல்- லோயர்கேம்ப், திண்டுக்கல்- சபரிமலை என இரண்டு கட்டங்களாக இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் முறையிட்டோம். அரசும் செயல்படுத்துவதாக உறுதி அளித்தது. பின்னர் பல்வேறு காரணங்களைக் காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு வழியாக மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story